Currently humming: பாப்பா பாப்பா கதை கேளு

I find myself humming this song, as I daily sing it to my 7 months old kid . She loves it a lot, at least as of now 🙂

பாப்பா பாப்பா கதை கேளு
காக்கா நரியின் கதை கேளு
தாத்தா பாட்டி சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை

ஊருக்கு வெளியே கடையிருக்கும்
கடையிலே வெங்காய வடையிருக்கும்
காக்கா வடையை திருடிகிச்சாம்
மரத்தில போயி குந்திக்கிச்சாம்

காக்கா மூக்கிலை வடையிருக்க
குள்ள நரியுமே பாத்திடிச்சாம்
லேசா வடையை வாங்கிடவே
நரி ஒரு தந்திரம் பண்ணிச்சாம்
காக்காப் பாட்டு பாடுண்ணு
குள்ளநரியுமே கேட்டிடுச்சாம்

வாயைத்திறந்து காக்கா பாட
வடையும் கீழே விழுந்திடுச்சாம்
விழுந்ததை நரியும் கவ்விடிச்சாம்
வாயிலை போட்டு தின்னுடிச்சாம்.

பாப்பா.. பாப்பா கதை கேளு
காக்கா நரியின் கதை கேளு
பாட்டா பாட்டி சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை

படம்: எங்க பாப்பா
பாடியவர்: ஏ.எல். ராகவன்